நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி போராட்டம் தீவிரம்
கொரோனா பிரச்சினையால் மாணவர்களின் கல்வி கற்றலில் மிகப்பெரிய தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வை நடத்துவதில் முனைப்பாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கப்படவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாணவர் இயக்கங்கள் போராடிவருகின்றன. அதன் நீட்சியாக தெலங்கானாவில் தேசிய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு . வெங்கட் பலமூர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சிகிசைக்காக அங்குள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.
நீட் பயத்தினால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
அவரின் இந்த செயலை ஆதரித்து டிவிட்டரில் #PostponeJEEAndNEET என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.