உதயநிதி ஸ்டாலின் vs விநாயகர் சிலை | சர்ச்சை

நடிகரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாலை ஒரு படத்தை பதிவேற்றியிருந்தார். அதில் ஒருவர் கையில் விநாயகர் சிலையை வைத்திருப்பதுபோல் உள்ளது . அது அவரா அல்லது வேறொருவரா என்பது தெரியவில்லை ஏனெனில் அதில் அதில்முகம் காட்டப்படவில்லை .

ஆனால் அந்தப்புகைப்பட்டம் திமுக தொண்டர்கள் மற்றும் அபிமானிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொள்கை ரீதியாக திமுக என்றைக்குமே தெய்வங்களையும், வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டதில்லை மாறாக இந்த புகைப்படத்தை , அதுவும் கட்சியின் முக்கியப்பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத்தாண்டி ஒரு காட்சிப்பிரதிநிதியாக அவர் செய்திருக்கும் செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இது 50 ஆண்டுகளுக்கும் மேலான திமுகவின் கட்சி கொள்கைகளை நீர்த்துப்போக செய்து விடும் என பலரும் அவரின் இடுகையை பின்னுட்டமிட்டு அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.

அவரின் பதிவு:

 

Saravanan Thangavel

A Journalist by passion; The publisher and Editor-in-Chief of The Outreach digital news platform owned by Esvel Group Enterprises.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *